தமிழக அரசானது பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக மானியங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசானது ஒரு நபருக்கு 1500 ரூபாய் விதம் 11 கோடி மொத்தம் செலவிட உள்ளதாக திட்டமிட்டுள்ளது.