திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலையில் நடந்து சென்ற சிறுமியின் வாயை பொத்தி வாலிபர் தூக்கி சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த நபர் சிறுமியை மிரட்டி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கடந்த 2 வாரங்களாக குற்றவாளியை தேடி வந்தனர். இதற்காக சுமார் 75க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்ததாக தகவல் வெளியானது. மேலும் குற்றவாளி குறித்து தகவல் சொல்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் அறிவித்தனர்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் தான் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான வாலிபர் மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்ட நிலையில் மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
