தமிழகத்தில் 3.5% கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலமாக விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்களின் விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆவின் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்தப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஊதா நிற டிலைட் பால் பாக்கெட் விற்பனைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படுவதாக எழுத சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நவம்பர் 25ஆம் தேதி காலை வழக்கம் போல ஆவின் நிர்வாகம் மூலம் பால் முகவர்களுக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.