தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் எந்தெந்த ரேஷன் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கை உடனே எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. டாஸ்மார்க் நிறுவனத்தில் பல்வேறு ஊழல் நடைபெற்ற வருவதாகவும் அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.