தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசுக்கு சொந்தமான ஆவினில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. ஆவின் நிறுவனம் மூலமாக தினந்தோறும் சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் பால் மட்டுமல்லாமல் தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பல பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆவின் நிறுவனம் குறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகத்தில் இனி வரும் நாட்களில் ஆவினில் மாற்றத்தை பார்க்கலாம் என கூறியுள்ளார். மேலும் ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சம் உயர்த்துவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.