ஜப்பானில் உள்ள ஒரு உலகப் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில், ‘கியோமாசா’ என்ற ஆண் கொரில்லா ஒன்று, தனது மனைவி கொரில்லா கத்தித் திட்டியதால் மனிதர்களைப் போலவே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு விசித்திரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பொதுவாக விலங்குகள் சண்டையிட்டுக் கொள்வது இயல்புதான் என்றாலும், இந்த வீடியோவில் அந்த ஆண் கொரில்லா, மனைவி கொரில்லாவின் வசவுகளுக்குப் பயந்து, அப்படியே மனிதக் கணவர்களைப் போலவே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, வாயில் கையை வைத்தபடி பெரும் கவலையில் ஆழ்ந்து உட்கார்ந்திருக்கிறது.

இதைப் பார்க்கும் போது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் குடும்பப் பிரச்சனையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதை உணர்த்துவது போல் உள்ளது.

இந்த வேடிக்கையான மற்றும் சுவாரசியமான கொரில்லாவின் ரியாக்‌ஷன் வீடியோவை பார்த்த உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள், “என்னப்பா.. கொரில்லாவுக்கும் இதே நிலைமைதானா!” என்று கமெண்ட் பாக்ஸில் சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளி வருவதால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.