விஜய் ஆரம்பித்துள்ள ‘தமிழக வெற்றி கழகத்தின்’ சென்னை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொண்டர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் வேலை செய்ய வேண்டும்.

மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார். 2026இல் தமிழகத்தின் முதல்வராக விஜய்யை உட்கார வைக்க வேண்டும். அதற்கான சேவைகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என பேசியுள்ளார்.