அரசியல் என்பது ஒரு பொதுப்பணி அது மற்ற துறைகளை போல் அல்ல என விஷால் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026இல் அரசியலுக்கு வருவேனா என்றால், அது அந்த நேரத்தில்தான் முடிவெடுக்கப்படும் என்றார். விஜய் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், விஜய்க்கு எனது வாழ்த்துகள்.

விஜய் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவது நல்லதுதான். விஜய்யுடன் கூட்டணியா என்பது எல்லாம் 2026இல் தான் தெரியவரும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றார்.