கேரளாவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தகவல்களை வழங்க வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் சுமார் 18,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.