உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், திங்கள்கிழமை (டிசம்பர் 15) துபார் பகுதியில் அச்சிறுமியை மீட்டனர்.
செல்போன் மூலம் அறிமுகமான சீதாப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் பால் (22) என்ற இளைஞர், தன்னை கடத்திச் சென்று கடந்த 2 வாரங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த எஸ்.பி. ஓம்வீர் சிங் தலைமையிலான போலீஸார், குற்றவாளி ரஞ்சித் பாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
