உத்தரப்பிரதேசத்தில் பெண்  ஒருவரிடம் நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டு தப்பி ஓடிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில், அந்த நபர் பெண்ணை  தவறான முறையில் தொட்டுவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

மேலும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இது மீண்டும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த அருவருக்கத்தக்கச் செயல் குறித்து லோக்மத் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாதிக்கப்பட்ட பெண்  மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

“>

இத்தகைய வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பகல் நேரத்திலேயே அரங்கேறியுள்ள இந்தத் துணிச்சலான குற்றச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.