மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாம்பு பண்ணை, அடுத்த 5 மாதங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், அந்த வெப்பத்தின் தாக்கம் பாம்புகளைப் பாதிக்காமல் இருக்கவும், அதேபோல் பாம்புகளின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாம்புகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக இந்த 5 மாத கால விடுமுறை விடப்பட்டுள்ளதால், வடநெம்மேலி பாம்பு பண்ணைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மீண்டும் பண்ணை திறக்கப்படும் வரை பொதுமக்கள் அங்கே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
