செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், இட்லி சட்னியில் பல்லி வால் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், அங்கு இட்லி விற்பனை செய்யும் ஒரு பெண்ணிடம் இட்லி மற்றும் சட்னி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சட்னிக்குள் பல்லி வால் ஒன்று கிடப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பல்லி விழுந்த சட்னியைச் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்படலாம் என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் 9 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
