சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சைப் பதறவைக்கும் அதே வேளையில், பார்ப்போரைக் கைதட்ட வைக்கும் ஒரு சிசிடிவி காட்சி பரவி வருகிறது. ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபடி நிற்க, அவனுடன் வந்த மற்றொருவன் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை நோட்டமிட்டுள்ளான்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில், அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அவன் டக்கென்று பறித்துள்ளான். செயினைப் பறித்துவிட்டு, தயாராக நின்ற கூட்டாளியின் பைக்கில் ஏறி ‘ஒன் வே’ பாதையில் மின்னல் வேகத்தில் தப்பிச்செல்ல முயன்றுள்ளான்.

அவர்கள் தப்பித்துச் செல்ல முயன்ற அடுத்த இரண்டாவது வினாடியே, அங்கு ஒரு மிகப்பெரிய அதிரடி ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. அவர்கள் தப்பிப்பதற்கு வெறும் இரண்டு வினாடிகளுக்கு முன்பாக, அதே பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு போலீஸ்காரர்கள் இந்தச் சம்பவத்தைக் கவனித்துவிட்டனர்.

ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், தப்பி ஓட முயன்ற திருடர்களின் பைக் மீது தங்களது இருசக்கர வாகனத்தை நேருக்கு நேராகப் பாய விட்டு, அவர்களைக் கீழே தள்ளி நூதனமாகப் பிடித்துள்ளனர்.

கையும் களவுமாக மாட்டிய அந்தத் திருடர்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையிலேயே தர்ம அடி கொடுத்து, உடனடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சினிமாவில் மட்டும்தான் க்ளைமாக்ஸ் நேரத்தில் போலீஸ் கரெக்டாக வருவார்கள் என்று நினைத்தோம்.

 

View this post on Instagram

 

A post shared by Vinoth Babu (@vinothbabuvideos)

“>

நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை இப்பதான் முதல் தடவை பார்க்கிறோம்” என்றும், “இது போன்ற அதிர்ஷ்டமான சம்பவங்கள் நூறில் ஒரு முறைதான் நடக்கும்; அந்த போலீஸ்காரர்களின் துரிதமான செயல்பாட்டிற்கு நமது சல்யூட்!” என்றும் தங்களது பாராட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.