சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரீல்ஸ் (Reels) மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகி, சிலர் புகழ் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் லைக்குகள், பார்வைகள், பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காக ஆபத்தான வித்தைகளைச் செய்கின்றனர். இதனால், தங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துகின்றனர்.
ஆபத்தான ஸ்டண்ட்களைச் செய்யும் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. அண்மையில், இதுபோன்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆபத்தான வித்தைகளைச் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இந்த வீடியோவில், பகல் நேரத்தில் பரபரப்பான நெடுஞ்சாலையில், போக்குவரத்து விதிகளை மீறி, அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளனர். ஒரு ஓட்டுநர் கைப்பிடியை விடுத்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினார்.
மற்றொரு ஓட்டுநர், முன்னால் செல்லும் லாரியின் பின்புறத்தைத் தொட்டவாறு, முன் சக்கரத்தை உயர்த்தி ஆபத்தான வித்தைகளைச் செய்து மகிழ்ந்தார். இந்தக் காட்சிகளை மற்றொரு நபர் கேமராவில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினார். இந்த வைரல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இவர்களின் செயலைக் கண்டித்து, இதுபோன்ற ஆபத்தான செயல்களால் தங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனக் கருத்து தெரிவித்து, இவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
