ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லத் தயாராகி, பையை முதுகில் மாட்டிக்கொண்டு, மதிய உணவுப் பெட்டியுடன் வழக்கமாக பஸ் நிற்கும் இடத்தில் காத்திருந்தாள். பஸ் வருவதைப் பார்த்து, நிறுத்தும்படி கையை உயர்த்தினாள். ஆனால், ஓட்டுநர் அவளைப் பார்க்காமல் பஸ்ஸை முன்னோக்கி ஓட்டிச் சென்றுவிட்டார். பஸ் தன்னை விட்டுவிட்டுப் போனதால் அந்தச் சிறுமி மிகவும் வருத்தமடைந்து அழுதாள். அவளுடைய தாய், “கவலைப்படாதே, ஒருவேளை ஓட்டுநர் உன்னைப் பார்க்காமல் போயிருக்கலாம். பஸ் திரும்பி வரும்” என்று ஆறுதல் கூறினார்.

சிறிது தூரம் சென்ற பிறகு, ஓட்டுநர் தனது தவறை உணர்ந்து, உடனே பஸ்ஸை பின்னோக்கி கொண்டு வந்தார். பஸ் திரும்பி வந்ததைப் பார்த்து சிறுமி மகிழ்ச்சியில் திளைத்தாள். ஓட்டுநர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மீண்டும் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். இதனால் சிறுமியும் அவளது தாயும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அழகான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் சிறுமியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, ஓட்டுநரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.