மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளைக் கத்தியால் தாக்கி அச்சுறுத்தி வந்த நபர், புதன்கிழமை இரவு போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தேவேந்திர அஹிர்வார் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 29-ம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு ஆத்திரத்தில் வெளியேறியுள்ளார்.
அந்த விரக்தியில் சாலையில் சென்ற மாணவிகளைத் தனது இலக்காகத் தேர்ந்தெடுத்து, கூர்மையான கத்தியால் மூன்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் இரண்டு மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் போபால் மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர் முகத்தை மறைத்துத் தாக்குதல் நடத்தியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.
இருப்பினும், 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இறுதியாக அவரை சோலா பகுதியில் வைத்து சுற்றி வளைத்துப் பிடித்தனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Police Teams, 200 CCTVs: How Bhopal Serial Knife Attacker Was Caughthttps://t.co/S7ms1IydMo
— Anurag Dwary (@Anurag_Dwary) February 5, 2026
“>
மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
