உலக நாடுகளை உலுக்கி வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக வணிகக் கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
அமெரிக்கா தனது கடற்படையைக் கொண்டு ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை முற்றுகையிட்டிருப்பதை “கடல் கொள்ளை” என்று ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து சரியான ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், ஈரானியப் பகுதிகள் மீது மீண்டும் குண்டுமழை பொழியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.
