மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா (Meta) நிறுவனம் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மெட்டா, இந்த முறை சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி தான். மனிதர்கள் செய்து வந்த பல வேலைகளை ஏ.ஐ தொழில்நுட்பமே மிகத் துல்லியமாகச் செய்து விடுவதால், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மெட்டா முடிவு செய்துள்ளது.
“எதிர்காலத் தேவைகளுக்கு ஏ.ஐ தான் முக்கியம்” என நிறுவனம் கூறி வரும் நிலையில், வேலையை இழக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
