நாட்டின் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வோடாபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி 199 ரூபாய் மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகின்றது. பயணங்கள் தங்கள் திட்டத்தின் படி கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் 2ஜிபி அல்லது 5gb இன்டர்நெட் டேட்டா பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பயனர்கள் இந்த சலுகையை பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் VI செயலியில் ஆக்டிவேட் செய்து 28 நாட்களுக்குள் டேட்டாவை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடாபோன் ஐடியா எப்போதும் தனது பிரீபெய்டு திட்டத்தில் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டாவை வழங்கி வருகின்றது.