பிளிப்கார்டில் ஐபோன் 14ல் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.79,900 விலை கொண்ட ஐபோன் 14ஐ பிளிப்கார்ட்டில் ரூ.10,000 தள்ளுபடி உடன் வாங்கலாம். கடந்த வருடம்  நிறுவனம் மினிக்கு பதில் பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இது அதிக செயல் திறன் வாய்ந்த ஒரு நல்ல போனாகும். இந்த அசத்தலான போனை மலிவு விலையில் வாங்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஐபோன் 14-ன் அறிமுக விலையானது ரூபாய்.79,900 ஆகும்.

இருந்தாலும் பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூபாய்.66,900-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தொலைபேசியில் ரூபாய்.13,000 பிளாட் தள்ளுபடியானது வழங்கப்படுகிறது. அதோடு இந்த தொலைபேசியில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இருக்கிறது. இதனால் விலை மேலும் குறைக்கப்படலாம். இப்போனை வாங்கும் போது ஆக்சிஸ் வங்கி கார்டு வாயிலாக பணம் செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி பெறலாம். இது தவிர்த்து ரூபாய்.21,400 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் இருக்கிறது.