ஆண்ட்ராய்டு போன் மற்றும் லேப்டாப்களில் மூன்றாவது தரப்பு பயன்பாடுகளை சர்ச் எஞ்சின்களாக பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கூகுள் நிறுவனம் தனக்கு சொந்தமான செயல்களையே பயனர்கள் பயன்படுத்தும் வகைகளில் ஆண்ட்ராய்டு போன்களை வடிவமைத்துள்ளது.

இதனால் பிற செயலை நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் கூகுள் செயலிகளை நீக்க பயனர்களை அனுமதிக்குமாறு இந்திய வணிகப் போட்டி ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கூகுள் மீது 162 மில்லியன் டாலர் அபராதமும் விதித்துள்ளது.