அண்மை காலமாக உலகளவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. மெட்டா நிறுவனம் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புது வசதிகளை சேர்த்து, அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி “கொயட் மோட் (Quiet mode)” எனப்படும் புது வசதியை இம்முறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Quiet Modeஐ ஆன் செய்து வைத்துவிட்டால், தங்களுடைய நண்பர்கள் மற்றும் பாலோவர்களிடம் இருந்து வரும் அதிகப்படியான நோட்டிபிகேஷன் மறைக்கப்பட்டுவிடும். எனினும் நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு Quiet Modeஐ ஆக்டிவேட் செய்து உள்ளீர்கள் என்பது குறித்து அவர்களுக்கு எந்த ஒரு நோட்டிபிகேஷனும் செல்லாது. ஒரு வேளை உங்களுக்கு யாரேனும் மெசேஜ் செய்தால்கூட அவர்களுக்கு ஆட்டோமேட்டிக் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுவிடும்.

இப்போது யுஎஸ், யுனைடெட் கிங்டம், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருப்பவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி முதல் Quiet Mode வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து மற்ற உலக நாடுகளில் கூடிய விரைவில் இந்த வசதியானது பயன்பாட்டிற்கு வரும் என இன்ஸ்டாகிராம் அறிவித்து உள்ளது.