இப்போது டுவிட்டர் புளூ என்ற சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கான, புது சந்தா விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியாகி உள்ளது. உங்களது டுவிட்டர் கணக்கை சரிபார்க்கப்பட்ட கணக்கு என மாற்றவேண்டும் எனில், twitter ப்ளூ என்ற பணம் செலுத்தி பெறக்கூடிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இதற்கிடையில் சந்தா செலுத்தினால் உங்களது கணக்கில் ஒரு புளூடிக் தோன்றும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில அம்சங்களும் உங்களது கணக்கிற்கு கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக சந்தா செலுத்துவோருக்கு தான் டுவிட்டை எடிட் செய்யும் அம்சத்தை எலான்மஸ்க் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டிராய்டு போனில் டுவிட்டர் ப்ளூ டிக் வேண்டுமெனில், மாதம் அமெரிக்க டாலரின் மதிப்பில் 1 மாத சந்தா விலையாக 11 டாலர் (இந்திய மதிப்பில் 895 ரூபாய்) செலுத்தவேண்டும். புதியதாக டுவிட்டர் கணக்கு துவங்கியவர்கள் உடனே இந்த சேவையை பெற முடியாது.