அமேதி மாவட்டத்தில் உள்ள நிஹல்கர் ரயில் நிலையம் அருகே, ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு பணியில் இருந்த வீரேந்திரா என்ற ஊழியர், மது போதையில் ரயிலுக்காக மூடிய கேட்டை மீண்டும் திறக்க மறந்து அங்கேயே இருந்துள்ளார்.

இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக கேட் மூடப்பட்டிருந்ததால், சாலையின் இருபுறமும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்கள் இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மாற்று ஊழியர் அனுப்பப்பட்டு கேட் திறக்கப்பட்டது. பணியின் போது மது அருந்திவிட்டு அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் வீரேந்திரா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

“>

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உயர் அதிகாரிகள் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.