சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பள்ளி குழந்தைகளின் உணவு முறை குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வகுப்பறையில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் மதிய உணவாக மேகி, சிப்ஸ் போன்ற சத்துக்களே இல்லாத துரித உணவுகளையே கொண்டு வந்துள்ளனர்.

ஒரு குழந்தை மட்டுமே வீட்டில் சமைத்த ஆரோக்கியமான காய்கறி மற்றும் ரொட்டியை உணவாகக் கொண்டுள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் சத்தான உணவு மிக அவசியம் என்ற நிலையில், இத்தகைய துரித உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

இந்த வீடியோவை பார்த்த பலரும் நவீன கால பெற்றோர்களின் வளர்ப்பு முறை குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் நேரமின்மை மற்றும் குழந்தைகளின் பிடிவாதத்தை இதற்குக் காரணமாகச் சொன்னாலும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி சத்தான உணவுகளை வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

“>

பேக் செய்யப்பட்ட உணவுகள் சுவையாக இருந்தாலும், அவை குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரம் இணையத்தில் ஒரு விவாதத்தையே உருவாக்கியுள்ளது.