கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் அதிபர் லுகாஷென்கோ, முதன்முறையாக வடகொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பியாங்காங்கில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்த அவர், இரு நாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாகப் பேசினார். உக்ரைன் போரில் ரஷ்யாவை ஆதரிக்கும் இந்த இரு நாடுகளும், தற்போது தங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தச் சந்திப்பின் போது பெலாரஸ் அதிபர், கிம் ஜாங் உன்னிற்கு ஒரு நவீன ரகத் துப்பாக்கியைப் பரிசாக வழங்கினார். அப்போது “எதிரிகள் தென்பட்டால் இது உங்களுக்குப் பயன்படும்” என்று அவர் வேடிக்கையாகக் கூற, அதைக் கேட்டு கிம் ஜாங் உன் சிரித்துக்கொண்டே அந்தத் துப்பாக்கியைச் சுடுவது போலச் சைகை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
<a href=”http://

“>

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பதிலுக்கு கிம் ஜாங் உன், பெலாரஸ் அதிபரின் உருவம் பொறிக்கப்பட்ட அழகான பூ ஜாடி ஒன்றைப் பரிசாக அளித்தார். பயணம் முடிந்து கிளம்பிய லுகாஷென்கோவை, கிம் ஜாங் உன் நேரில் விமான நிலையம் வரை சென்று கட்டித்தழுவி வழியனுப்பி வைத்தார். உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.