ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இன்று தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணைகளில், “இந்திய மக்களுக்கு நன்றி” என்று ஈரான் ராணுவம் எழுதியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட ஈரானியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதற்காக இந்தியாவிற்கு ஈரான் இவ்வாறு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் பகுதி மக்கள் தங்களின் சேமிப்புப் பணம், நகைகள் மற்றும் ஆடு, மாடுகளைக் கூட ஈரானுக்கு உதவியாக வழங்கியதை ஈரான் தூதரகம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. போர் பதற்றம் ஒருபுறம் இருந்தாலும், இந்தியா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணை வழியாக தடையின்றி செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
