மும்பையைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு ஒரு நாள் காலையில் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறம் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது கரும் பழுப்பு நிறமாக மாறியிருந்தது.

மேலும் மும்பை பி.டி. ஹிந்துஜா மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணரான டாக்டர் அயன் குமார் டே இது குறித்துக் கூறுகையில், சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது  எந்தச் சூழ்நிலையிலும் சாதாரணமானது அல்ல என்றும், வலியே இல்லை என்றாலும் கூட அதனை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் எச்சரிக்கிறார்.

இதனால் சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகக் கற்கள் அல்லது கடுமையான உடற்பயிற்சி போன்ற பாதிப்பில்லாத காரணங்களால் இது ஏற்படலாம் என்றாலும், சில சமயங்களில் இது சிறுநீரகப் புற்றுநோய் அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற உயிருக்கே ஆபத்தான நோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால் ஒருமுறை இப்படி நடந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

அதோடு சிறுநீரகப் புற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் வலி, எடை இழப்பு போன்ற எந்தவொரு வெளிப்படையான அறிகுறிகளும் இருக்காது என்பதால், சிறுநீரில் இரத்தம் வருவதை அலட்சியப்படுத்தினால் நோயைக் கண்டறியும் ஆரம்ப வாய்ப்பை இழக்க நேரிடும் என்று டாக்டர் டே விளக்குகிறார்.

இந்நிலையில் சிறுநீரில் இரத்தம் வருதல் அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அல்ட்ராசவுண்ட் சிடி ஸ்கேன் அல்லது சிஸ்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகள் மூலம் அதன் காரணத்தைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை பெறுவது உயிரைக் காக்கும்.

மேலும், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதுடன், சிறுநீரின் நிறம், மணம் மற்றும் சிறுநீர் கழிக்கும் இடைவெளிகளில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.