ஆண்டுக்கு ₹82 லட்சம் வருமானம் ஈட்டியும், தம்மால் நிம்மதியாக வாழ முடியாமல் ஒரு இறுக்கமான பட்ஜெட்டிற்குள் முடங்கிப் போயிருப்பதாக 26 வயது இளைஞர் ஒருவர் ரெடிட் தளத்தில் பதிவிட்டது தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதித்தும், அன்றாடச் செலவுகள் மற்றும் எதிர்காலச் சேமிப்பிற்குப் பிறகு கையில் மிகக் குறைந்த அளவே பணம் மிஞ்சுவதாக அவர் தனது நிதி விரக்தியைப் பகிர்ந்துள்ளார். பலருக்கும் இது ஒரு கனவுச் சம்பளமாக இருந்தாலும், இன்றைய பொருளாதாரச் சூழலில் இந்த வருமானமும் போதவில்லை என்ற அவரது அடுக்கடுக்கான வாதங்கள் நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அவரது இந்த விரக்திக்கு முக்கியக் காரணமாக அவர் குறிப்பிடுவது, தற்போதைய மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் சேமிப்பு இலக்குகளாகும். சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதி வாடகை, வரிகள், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அவசரகாலச் சேமிப்பிற்கே சென்றுவிடுவதால், சொகுசாக வாழ்வதற்கோ அல்லது தாராளமாகச் செலவு செய்வதற்கோ தன்னிடம் பணம் இருப்பதில்லை என அவர் விளக்கியுள்ளார்.
இந்நிலையில் உயர் வருமானம் பெற்றாலும் கூட, திட்டமிட்ட நிதி மேலாண்மையும் வாழ்க்கை முறை சார்ந்த செலவுகளும் எவ்வாறு ஒருவரை நிதி நெருக்கடி போன்ற உணர்வுக்குள் தள்ளுகிறது என்பதை இந்த ரெடிட் பதிவு அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
