அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத காரணத்தால், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் தீவிரமாகப் போரிட்டு வரும் நிலையில், தற்போது ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பும் இந்த மோதலில் குதித்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது முதல்முறையாக ஹவுதி அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள டிமோனா அணு ஆராய்ச்சி மையத்தைக் குறிவைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

இருப்பினும், அந்த ஏவுகணையை நடுவானிலேயே தடுத்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஹவுதி அமைப்பின் இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.