மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை முன்பாக, மூன்று பெண்கள் மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய இரும்புப் பொருட்களைச் சேகரிக்கும் வேலை செய்து வரும் இந்தப் பெண்கள், பாம்டோலா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், அதில் ஒரு பெண் சுயநினைவின்றி தரையில் விழுந்து புரண்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இது குறித்துப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்தப் பெண்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்குச் சென்ற பிறகும் போதை தலைக்கேறிய நிலையில் அந்தப் பெண்கள் வினோதமான செயல்களில் ஈடுபட்டு ரகளையைத் தொடர்ந்துள்ளனர்.

“>

 

பொது இடத்தில் பெண்கள் மது குடித்துவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.