டெல்லியில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தின் கிடங்கில், டெலிவரி ஊழியர் ஒருவரை அதன் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊழியரை ‘கோழி’ போல நிற்க வைத்து அவமானப்படுத்தியதோடு, அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, தினசரி நமக்காக ஓடிக்கொண்டிருக்கும் டெலிவரி ஊழியர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மரியாதை எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு முன்பாக பெங்களூருவிலும் ஒரு டெலிவரி ஊழியர் சாலை விபத்து ஒன்றின் காரணமாக மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது டெல்லியில் நடந்துள்ள இந்த அநாகரீகமான செயல், டெலிவரி மற்றும் கிக் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்துப் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

“>

 

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.