சமூக வலைதளங்களில் தினமும் வினோதமான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இரண்டு இளம்பெண்கள் தங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க கையாண்ட ஒரு விசித்திரமான முறை இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரண்டு சிறிய நாய்க்குட்டிகளின் கால்களை பெயிண்டில் நனைத்து, அவற்றைக் கொண்டு கதவில் முத்திரை பதித்து அழகான கோலங்களை உருவாக்குகின்றனர்.
நாய் வளர்ப்பவர்கள் நாய்களின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற ரீதியில் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை ‘மீம்செனான்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் “டிசைன் பார்க்க நன்றாக இருக்கிறது” என்று கூறினாலும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பலர் “இது விலங்கு வதை” என்றும், “நாய்களின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
நகைச்சுவையாகவும் அதே சமயம் சர்ச்சையாகவும் மாறியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
