சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் ‘வினோத் அங்கிள்’ என்று அன்போடு அழைக்கப்படும் 60-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குப் பயணம் செய்வது குறித்து வழங்கிய எதார்த்தமான வாழ்க்கைப் பாட வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இன்றைய 20 மற்றும் 30 வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் பலரும் பயணம் செய்ய ஆசைப்பட்டாலும், நிதி நெருக்கடி, வேலை அழுத்தம் போன்ற காரணங்களைச் சொல்லித் தங்களது கனவுகளைத் தள்ளிப் போட்டு, வெறும் திட்டமிடுவதிலேயே நேரத்தை வீணடிப்பதைக் சுட்டிக்காட்டியுள்ளார் வினோத் அங்கிள்.

“இளமைப் பருவமே உலகைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஆகச்சிறந்த தருணம்; வயது கூடும் போது நம் வாழ்வின் பெரும்பகுதி காத்திருப்பதிலேயே கழிந்து விடும், ஒரு கட்டத்தில் நண்பர்கள் பிஸியாகி, உடலில் இருந்த வலிமையும் குறைந்துவிடும் போது தள்ளிப்போட்ட பயணங்களை எண்ணிப் வருந்த நேரிடும்” என்று உருகியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vinod Kumar Sharma (@instauncle_9)

“>

மேலும், “உலகைச் சுற்றிப் பார்க்காவிட்டால் உங்கள் வாழ்க்கை மற்றவர்களின் கதைகளுக்குள்ளேயே சுருங்கிவிடும்; எல்லாப் பாடங்களும் பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்களில் இருப்பதில்லை, குழந்தைகளே,உடனே பயணங்களைத் தொடங்குங்கள்” என்று அவர் தனது ரீல்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள கேப்ஷன் தற்பொழுது லட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைத் தொட்டு, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பகிரப்பட்டு வருகிறது.