சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ‘@kaliyug_wale’ என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ள சிறுவர்களின் விசித்திரமான உள்விளையாட்டு வீடியோ ஒன்று தற்பொழுது இணையவாசிகளைப் பெரும் வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தி வேகமாக வைரலாகி வருகிறது.
ஆன்லைன் கேம்களைத் தாண்டி, இன்றைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உடன்பிறப்புகளுடன் சேர்ந்து விசித்திரமான விளையாட்டுகளை உருவாக்கி அதனை வீடியோவாகப் பதிவிடுவது வழக்கமாகி வரும் சூழலில், இந்த வீடியோ முற்றிலும் தனித்துவமாக அமைந்துள்ளது.
ஒரு மூடிய அறைக்குள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நிற்கும் சிறுவர்கள், தங்களது படுக்கை மெத்தைகளை ராணுவக் கேடயங்களைப் போலப் பிடித்துக்கொண்டு, ஒருவரையொருவர் செருப்புகளால் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்கின்றனர்; மேலும், எதிரணியினர் வீசும் செருப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தலையணைகளைத் தற்காப்பு அரணாகப் பயன்படுத்துகின்றனர்.
असली PUBG इधर खेला जा रहा है 😂😂😂 pic.twitter.com/ItW2eQzXaE
— गुरुजी ( कलियुग वाले ) (@kaliyug_wale) June 19, 2026
“>
இந்தத் தனித்துவமான காட்சியை “உண்மையான பப்ஜி இங்கே தான் விளையாடப்படுகிறது” என்ற வேடிக்கையான கேப்ஷனுடன் நெட்டிசன்கள் பகிர்ந்து வருவதால், “இது என்ன மாதிரியான விளையாட்டு?” என்று வியப்புடன் கமெண்ட் செய்து தற்பொழுது இந்த வீடியோவிற்குப் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
