சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி வேறொரு நபருடன் தவறான தொடர்பில் இருந்ததை, அவரது கணவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். அந்தச் சமயத்தில் அவர்களது இரண்டு வயதுக் குழந்தையும் தந்தை பக்கத்திலேயே இருக்கிறது.

பிடிபட்ட அந்தப் பெண், தவறு செய்ததற்காக வருத்தப்படாமல், மாறாகத் தனது கணவரிடமே ஆவேசமாக வாக்குவாதம் செய்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது கணவரை அடிக்கவும் முற்படுகிறார். குழந்தையை அருகில் வைத்துக்கொண்டு, அந்தப் பெண் காட்டிய அநாகரீகமான நடத்தை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

“தவறு செய்தவர்களுக்கே இத்தனைத் துணிச்சலா?” என்றும், “சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதால் தான் இது போன்ற துணிச்சல் வருகிறதா?” என்றும் இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன. ஒரு குடும்பத்தின் சிதைவையும், பச்சிளம் குழந்தையின் முன்னால் அரங்கேறிய இந்த கசப்பான சம்பவத்தையும் கண்டு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.