திருப்பூர் இடுவாய் பகுதியில் குடியிருப்புக்கு அருகில் குப்பை கொட்டுவதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் அமைதியான முறையில் போராடினார்கள். ஆனால், போராட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் காவல்துறை பெண்கள் மற்றும் முதியவர்கள் என்றும் பார்க்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த பல பெண்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் இடுவாய் பகுதியில் குப்பை கொட்டுவதை தடுத்த பொது மக்களை மற்றும் பெண்களை அராஜக போக்கில் தாக்கிய காவல் துறை, பலர் மருத்துவமனையில் அனுமதி.
விரைவில் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் தமிழக மக்கள்.!@BJP4TamilNadu#tiruppur pic.twitter.com/CYOLDyysJ3
— SudhamaniBJP (@sudhamanibjp) December 16, 2025
தங்கள் பகுதி சுகாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று நியாயம் கேட்ட மக்கள் மீது, அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படி வன்முறையை ஏவுவது பெரும் அராஜகம் என்று சமூக வலைதளங்களில் மக்கள் கொதித்து வருகின்றனர். “மக்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையே இப்படி அத்துமீறலா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்களைத் தாக்கும் இந்த மோசமான நிலைக்கு விரைவில் ஒரு முடிவு கட்ட வேண்டும் எனத் தமிழக மக்கள் ஆவேசத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
