உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் சந்தோஷ் சரோஜ், வெயிலில் பஞ்சர் ஆன சைக்கிளுடன் தவித்த சிறுமிக்கு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பணியில் இருந்தபோது, சாலையோரம் கவலையுடன் நின்ற சிறுமியைக் கண்ட அவர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி அவரிடம் நலம் விசாரித்தார்.

சிறுமிக்குத் தண்ணீர் கொடுத்துத் தாகம் தீர்த்ததுடன், அவரைத் தனது வாகனத்தில் அழைத்துச் சென்று, பஞ்சர் கடைக்குச் சென்று சைக்கிளைச் சரிசெய்து கொடுத்தார்.

சைக்கிள் தயாரானதும், சிறுமி தன்னிடமிருந்த பணத்தைக் காவலரிடம் கொடுக்க முயன்றபோது, அவர் அதை அன்புடன் மறுத்துவிட்டார். “நீ என்னை அண்ணன் என்று கூப்பிட்டுவிட்டாய், உன்னிடமிருந்து நான் எப்படிப் பணம் வாங்க முடியும்?” என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் ஈர்த்துள்ளன.

இவரின் இந்த மனிதாபிமானமிக்கச் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது,