சமூக வலைதளங்களில் தற்போது திமுக இளைஞரணி மாநாட்டின் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மேடையில் பேசும் உதயநிதி ஸ்டாலின், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்.
அவர் இதைப் பேசும் அதே தருணத்தில், அங்கிருந்த கேமராமேன் கேமராவை மேடையிலிருந்த சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோரின் பக்கம் திருப்புகிறார். உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கான வாய்ப்பு பற்றிச் சொன்னதைக் கேட்டவுடன், இந்த மூன்று மூத்த தலைவர்களும் கொடுத்த ரியாக்ஷன் அப்படியே அப்பட்டமாக கேமராவில் பதிவாகியுள்ளது.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂#திருட்டுதிமுக pic.twitter.com/8BnvBbgz79
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) December 16, 2025
அவர்களின் முகபாவனைகளும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட விதமும் “அப்ப நாங்க எல்லாம் என்ன பண்றது?” என்பது போன்ற ஒரு மெளனமான கேள்வியை எழுப்புவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். டைமிங்கான இந்த கேமரா கோணமும், சீனியர் தலைவர்களின் அந்த ‘ரியாக்ஷன்’ காட்சிகளும் தற்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
