சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், தனது மனைவி வேறொரு நபருடன் இருப்பதை நேரில் கண்ட கணவன், ஆத்திரமடைந்து அந்த நபரைச் சாலையில் வைத்து சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு குறித்துத் தெரிந்துகொண்ட அந்தத் தம்பதியின் கணவர், பொறுமையிழந்து அந்த நபருடன் சண்டையில் ஈடுபடுகிறார்.



அப்போது, கணவனுக்கும் கள்ளக்காதலனுக்கும் இடையே நடக்கும் இந்த மோதலைத் தடுக்க அந்தப் பெண் இடையில் வந்து சண்டையை விலக்க முயற்சி செய்கிறார். கணவன் ஆத்திரத்துடன் அந்த நபரைத் தாக்க முற்படும்போது, அந்தப் பெண் தனது காதலனைக் காக்கப் போராடுவது அங்கிருந்தவர்களின் செல்போன் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.