முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள், சென்னை சி.ஐ.டி. காலனியில் மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். அவருக்கு சமீப காலமாக அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் இருந்தன. இதற்காக கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.