பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக் குறைவால் சில வாரங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், தந்தை ராமதாஸை வைத்துப் பலர் நாடகம் ஆடுகிறார்கள் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருந்தார். “அய்யாவுக்கு ஏதாவது ஆனால் சும்மா இருக்க மாட்டேன்; தொலைத்து விடுவேன்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ், கூறியதாவது: “அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை. மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான்.” மருத்துவமனையில் இருந்தபோது என்னை தலைவர்கள் வந்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார். மேலும் புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களும் தன்னை வந்து சந்தித்ததாகவும் ராமதாஸ் கூறினார். இதில் புதிதாக ஆரம்பித்த கட்சி என்றால் அது விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியாக தான் இருக்கக்கூடும். அதனைத்தான் புதிதாக ஆரம்பித்த கட்சி என ராமதாஸ் மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
