பிரபல சமூக வலைதள பிரபலமும், ‘தி ரெபெல் கிட்’ (The Rebel Kid) என்று அழைக்கப்படுபவருமான அபூர்வா முகிஜாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அபூர்வா, “இரண்டு ரூபாய் மதிப்புள்ள சிறிய நடிப்பு வாய்ப்புகளுக்காக நான் யாருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன்; அதற்குப் பதிலாக துபாயைச் சேர்ந்த ஒரு ஷேக் என் முகத்தில் 10 முதல் 15 கோடி ரூபாயைத் தூக்கி எறிந்தால், ஒருவேளை நான் அதை யோசிப்பேன்.
ஆனால், ஒரு சினிமா வாய்ப்புக்காக இதையெல்லாம் செய்ய மாட்டேன்” என்று மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். சமீபத்தில் குருகிராமில் நடந்த ‘370 ரூபாய் பிரியாணி’ விவகாரம், நகைச்சுவை நடிகர் பிரணித் மோரின் மன்னிப்பு மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள் எனப் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் அபூர்வாவின் இந்த பழைய வீடியோ மீண்டும் வைரலாகி அனலைக் கிளப்பியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அபூர்வாவின் கருத்தை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவரது கமெண்டைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பல்வேறு பண விபரங்களைக் குறிப்பிட்டு ட்ரோல் செய்து வரும் நிலையில், தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ‘பிரத்யுஷ்’ என்ற நபரின் லிங்க்டின் ரொஃபைலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அவர் வேலை செய்யும் நிறுவனங்களைக் குறிப்பிட்டு அபூர்வா பகிரங்கமாக நெட்டிசன்களிடம் அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிக்கும் மற்றும் ஆபாசமாகப் பேசும் நபர்களுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற விவாதம் இதன் மூலம் தீவிரமடைந்துள்ளது. கடந்த காலப் பதிவுகள் எப்படி ஒருவரது தற்போதைய வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதற்கும், டிஜிட்டல் உலகில் பொது நபர்களின் பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு முக்கிய உதாரணமாக மாறியுள்ளது.
