ரஷியாவில் ரயிலில் பயணம் செய்த இந்தியப் பயணி ஒருவருக்கு பெண் டிக்கெட் பரிசோதகரை பார்த்ததும் ஏற்பட்ட ஆச்சரியமான அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரயிலில் பயணிகளின் டிக்கெட்டுகளைச் சரிபார்க்கும் பணியில் பெண் ஊழியர்களும் இருப்பதைப் பார்த்த அந்தப் பயணி, அவர்களது தோற்றத்தைப் பாராட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொலி இணையத்தில் பரவி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சந்தன் என்பவர் ரஷிய ரயிலில் பயணம் செய்தபோது, அங்கு பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகரை கவனித்துள்ளார். அவரை பார்த்ததும் வியப்படைந்த அவர், அந்தப் பெண் ஊழியர் ஒரு மாதிரி அழகாக இருப்பதாக தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீண்டும் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆர்வத்தில், அவர் பணியாற்றிய பெட்டியைத் தேடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Chandan Kumar (@chandan.traveller)

இதையடுத்து, அந்தப் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் இருந்த கேபினை சந்தன் தேடிக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற அவர், இரு பெண் ஊழியர்களுடன் பேச முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை அவர் காணொலியாக பதிவு செய்ததாகவும், அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய ரயில்களில் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பணியாற்றும் காட்சியும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த காணொலியை பார்த்த பலரும் இந்தியப் பயணியின் வித்தியாசமான அனுபவம் குறித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ரயிலில் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பணியாற்றுவது குறித்து பலரும் தங்களது ஆச்சரியத்தையும் பகிர்ந்து வருகின்றனர். அதேநேரத்தில், பணியில் இருக்கும் ஊழியர்களிடம் பேசும்போது அவர்களின் தனிப்பட்ட எல்லைகள் மற்றும் பணிச்சூழலை மதிப்பது அவசியம் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.