திருவள்ளூர் மாவட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் கணேசமூர்த்தி(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணேசமூர்த்தி சரஸ்வதி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சரஸ்வதி பல ஆண்களுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கணேசன் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சரஸ்வதிக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள சலவை கடையில் வேலை பார்க்கும் அன்சாரி(37) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்தனர்.

இதனை கண்டித்ததால் சரஸ்வதி இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் கொளத்தூரில் தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தார். சமீபத்தில் சரஸ்வதியும் அன்சாரியும் ஒன்றாக அமர்ந்து மது குடித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அன்சாரி சரஸ்வதியிடம் இன்னும் எத்தனை பேர் கூட தான் பேசிட்டு இருக்க? என கேட்டு சரஸ்வதி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜூலை 21ஆம் தேதி சரஸ்வதியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அன்சாரியை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.