பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கு விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருச்சி செல்கிறார்.
பின்னர் நாளை கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டு பகல் 2.25 மணிக்கு திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகளை அழைத்துச் செல்ல வருவோருக்கு பிரதான நுழைவு வாயிலில் அனுமதி அளிக்கப்படவில்லை. விமான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடைசி நேர இடையூறுகளை தவிர்க்க 3 மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் விமான நிலையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
