தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் உள்ள அனைத்து இல்லத்தரசிகளும் மற்றும் பொதுமக்களும் தங்களின் அன்றாட வீட்டு வேலைகளின் போது கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வு செய்தி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்சாரப் பொருட்கள் இல்லாத இடமே இல்லை. ஆனால், அவசர அவசரமாக வீட்டு வேலைகளைச் செய்யும்போது, பெண்கள் செய்யும் ஒரு மிகச்சிறிய அலட்சியம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திவிடும் அளவிற்குப் பெரிய விபத்தாக மாறிவிடுகிறது.

​சமீபத்தில் பெண் ஒருவர், ஃபிரிட்ஜ் ஓடிக்கொண்டிருக்கும் போதே (On-ல் இருக்கும் போதே) ஈரத்துணியை வைத்து அதனைச் சுத்தம் செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கடுமையான மின்சார அதிர்ச்சி (Electric Shock) ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

நல்ல வேளையாக உயிர் தப்பிய இந்தச் சம்பவத்தை முன்வைத்து, தற்போது சோஷியல் மீடியாக்களில் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஸ்ட்ரிக்ட்டான ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் அல்லது எந்தவொரு மின்சார சாதனத்தையும் சுத்தம் செய்வதற்கு முன்பாக, எப்போதும் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு, மெயின் பிளக்கை (Plug) வெளியில் எடுத்த பிறகு மட்டுமே துடைக்க வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். “உங்கள் பாதுகாப்பு தான் உங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய சந்தோஷம்; எனவே விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்று இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.