முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் இடையேயான பழைய பகை, தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் மிகக் கொடூரமான முறையில் வெடித்துள்ளது. பியர் நக்கிள் ஃபைட் லீக்கில் (Bear Knuckle Fight League) இணைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பஜ்ஜி, உனக்கு என் மீதும், அந்த பழைய அறைந்த சம்பவத்தின் மீதும் இவ்வளவு பிரச்சனை இருந்தால், விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு நேராக பாக்ஸிங் ரிங்கிற்குள் வா, நேருக்கு நேர் சண்டை போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்; நெஞ்சுல தில்லிருந்தா வா!” என்று மிக ஆக்ரோஷமாக ஓப்பன் சேலஞ்ச் விடுத்துள்ளார்.
மேலும், 2008 ஐபிஎல் சம்பவத்தை வைத்து ஹர்பஜன் சிங் நிறைய சம்பாதித்து விட்டதாகவும், தற்போது தனக்கும் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீசாந்தின் இந்த விபரீதமான சவாலுக்குத் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு வீடியோ மூலம் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். அந்த வீடியோவில், “தேவையில்லாமல் பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும்; எப்போதும் வெற்றுப் பாத்திரங்கள் தான் அதிக சத்தத்தை எழுப்பும்” என்று ஒரே வரியில் ஸ்ரீசாந்தை மிகக் கடுமையான முறையில் சாடியுள்ளார்.
🚨 HARBHAJAN SINGH REPLIED SREESANTH ON INSTAGRAM 🚨
Harbhajan Singh said: "Pay no attention to the haters; empty cans rattle the loudest."
– The Harbhajan–Sreesanth drama keeps throwing new surprises, Sreesanth just challenged Bhajji to a boxing match.😭 pic.twitter.com/ICt4CJb9jt
— Cricket Central (@CricketCentrl) June 19, 2026
இவர்களின் இந்த இணைய மோதல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பஜ்ஜியின் இந்த மாஸ் பதிலடிக்கு ஸ்ரீசாந்த் அடுத்ததாக என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் திக் திக் நிமிடங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
