திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கீழையப்பட்டி கிராமத்தில் முருகானந்தம்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் பிரபு மணிகண்டன். இவர் கடந்த 10 வருடங்களாக பொறியாளராக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது இன் தி பிகினி என்ற சிறையிலிருந்து வெளியே வரும் சேலஞ்சர்ஸ்களுக்காக ஒரு குறும்படம் எடுத்துள்ளார். அதோடு திரை விழாக்களுக்கும் தொடர்ந்து சென்று வருகிறார்.
அப்படி ஒரு திரை விழாவுக்கு செல்லும் போது தான் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த கரினாரேல் என்ற பெண்ணை சந்தித்தார். இவர்கள் இருவரும் சினிமா, கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்தை கொண்டிருந்தனர். அந்தப் பெண் ஒரு நடன கலைஞராக இருக்கும் நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் விவகாரத்தை கூறிய நிலையில் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் தமிழ்நாட்டில் வாலிபரின் சொந்த ஊரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில் பெண்ணின் வீட்டில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வெளிநாட்டு பெண் என்பதால் இந்த திருமணம் அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
